பா.ம.க வரைவு தேர்தல் அறிக்கை : PMK 2016 Election Manifesto – Draft for Peoples Consultation.

PMK 2016 Election Manifesto – Draft for Peoples Consultation.

“வளர்ச்சிக்கான செயல்திட்டம்: பா.ம.க வரைவு தேர்தல் அறிக்கை ” PMK 2016 Election Manifesto – Draft for Peoples Consultation.

கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையும் இணைந்து அண்மையில் சென்னையில் நடத்திய ‘ஜனநாயகத்துடன் கூடிய வளர்ச்சி’ என்ற தலைப்பிலான கருத்தங்கில் அறிவுப்பூர்வமாகவும், மக்கள் மீதான அக்கறையுடனும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவார்ந்த, ஜனநாயக நலன் சார்ந்த முன்முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரியுமான எம்.ஜி. தேவசகாயம் உள்ளிட்ட சான்றோர் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அதில் முதன்மையானது அரசியல் கட்சிகள் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான செயல் திட்டத்தை தேர்தல் அறிக்கையாக மக்களிடம் முன் வைக்க வைக்க வேண்டும்; அப்போது தான் அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்க மக்களுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்பதாகும். ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் முன் வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையை பா.ம.க முழுமையாக ஏற்கிறது.

தமிழ்நாட்டில் அறிவார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்;மக்களின் யோசனைகள் தான் அரசின் திட்டங்களாக உருப்பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். அதனால் தான் கடந்த காலங்களில் மக்களின் விருப்பத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திட்டங்களை எதிர்த்து கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தியிருக்கிறது. அந்த வகையில், வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தை மக்கள் ஆராய்வதற்கு அவகாசம் வழங்கும் வகையிலும், மக்களின் மேலான ஆலோசனைகளை பெறும் வகையிலும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கை சென்னையில் 16.9.2015 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மீது பொதுமக்களிடமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களிடமும் கருத்துக்கள் கோரப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளும் சேர்க்கப்பட்டு நிறைவு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். அது அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நலப்பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி செய்து கொள்ளும் சமூக ஒப்பந்தமாக இருக்கும்.

– மருத்துவர் ச. இராமதாசு அய்யா.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: