சிதம்பரம் தொகுதியின் பிரச்சினைகளும் தீர்வுகளும் – சிதம்பரம் தொகுதி வாக்காளர்களுக்கு பா.ம.க வேட்பாளர் இர. அருள் அளிக்கும் வாக்குறுதிகள்! மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்

May 9, 2016

இந்த இணைப்பை இணைப்பை சொடுக்கவும் – Booklet

Advertisements

ஈழப்போரின் கொடூரங்கள்: ஐநா விசாரணையின் முழு அறிக்கை!

September 16, 2015

ஐநா மனித உரிமை ஆணையர் விசாரணை அறிக்கை ஜெனீவா ஐநா மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு பகுதிகள் உள்ளன. அவற்றை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:

1. ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை – 19 பக்கம்

https://pmkpolicy.files.wordpress.com/2015/09/un-human-rights-office-report-on-sri-lanka.doc

2. ஐநா விசாரணை முழு அறிக்கை – 268 பக்கம்

UN Investigation Report on Sri Lanka-268 Pages


UN Human Rights Office report on Sri Lanka இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை

September 16, 2015

UN Human Rights Office report on Sri Lanka

UN Human Rights Office report on Sri Lanka: உள்நாட்டு விசாரணை கூடாது – இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கையில் தகவல்

இணைப்பு: இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை

 


பா.ம.க வரைவு தேர்தல் அறிக்கை : PMK 2016 Election Manifesto – Draft for Peoples Consultation.

September 16, 2015

PMK 2016 Election Manifesto – Draft for Peoples Consultation.

“வளர்ச்சிக்கான செயல்திட்டம்: பா.ம.க வரைவு தேர்தல் அறிக்கை ” PMK 2016 Election Manifesto – Draft for Peoples Consultation.

கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையும் இணைந்து அண்மையில் சென்னையில் நடத்திய ‘ஜனநாயகத்துடன் கூடிய வளர்ச்சி’ என்ற தலைப்பிலான கருத்தங்கில் அறிவுப்பூர்வமாகவும், மக்கள் மீதான அக்கறையுடனும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவார்ந்த, ஜனநாயக நலன் சார்ந்த முன்முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரியுமான எம்.ஜி. தேவசகாயம் உள்ளிட்ட சான்றோர் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அதில் முதன்மையானது அரசியல் கட்சிகள் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான செயல் திட்டத்தை தேர்தல் அறிக்கையாக மக்களிடம் முன் வைக்க வைக்க வேண்டும்; அப்போது தான் அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்க மக்களுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்பதாகும். ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் முன் வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையை பா.ம.க முழுமையாக ஏற்கிறது.

தமிழ்நாட்டில் அறிவார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்;மக்களின் யோசனைகள் தான் அரசின் திட்டங்களாக உருப்பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். அதனால் தான் கடந்த காலங்களில் மக்களின் விருப்பத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திட்டங்களை எதிர்த்து கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தியிருக்கிறது. அந்த வகையில், வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தை மக்கள் ஆராய்வதற்கு அவகாசம் வழங்கும் வகையிலும், மக்களின் மேலான ஆலோசனைகளை பெறும் வகையிலும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கை சென்னையில் 16.9.2015 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மீது பொதுமக்களிடமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களிடமும் கருத்துக்கள் கோரப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளும் சேர்க்கப்பட்டு நிறைவு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். அது அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நலப்பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி செய்து கொள்ளும் சமூக ஒப்பந்தமாக இருக்கும்.

– மருத்துவர் ச. இராமதாசு அய்யா.


இன்று புதிதாக சிலர் எழுப்பும் மது ஒழிப்பு கோரிக்கை – ஏழு ஆண்டுகளுக்கு முன்பே பாமக் முன்வைத்ததுதான்: தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை 2008

August 3, 2015

PMK Alcohol Policy 2008 – Full Report

“பூரண மதுவிலக்குதான் முதல் கையெழுத்து” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்தார். அன்று தொடங்கிய “பூரண மதுவிலக்கு” விவாதம் இப்போது ஒரு முதன்மை கோரிக்கையாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை (தமிழருவி மணியன்) என்று சிலரும், மதுவிலக்கே சாத்தியமில்லை (அ. மார்க்ஸ், மனுஷ்யபுத்திரன்) என்று வேறு சிலரும் கூறிவருகின்றனர்.

இதனிடையே, ‘படிப்படியான மதுவிலக்கு வேண்டாம்’ என்று பாமக சொல்வது போலவும், ‘சாத்தியமில்லாத ஒன்றை மருத்துவர் அன்புமணி இராமதாஸ்’ அவர்கள் பேசுவது போலவும் சிலர் பேசத்தொடங்கியுள்ளனர்.

கூடவே, பாமகவுக்கு மதுவிலக்கு குறித்து பாடம் எடுக்கவும் இவர்கள் முயல்கின்றனர். ஆனால், படிப்படியான மது ஒழிப்பு எவ்வாறு சாத்தியம் என்பதற்கான அறிவியல்பூர்வமான வழிகளை 2008 ஆம் ஆண்டிலேயே பாமக முன்வைத்தது என்பதை இவர்களுக்கு நாம் இப்போது நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

பாமகவின் கோரிக்கையை அப்போதே செயல்படுத்த கலைஞர் கருணாநிதி முன்வந்திருந்தால் இப்போது தமிழ்நாடு மது இல்லாத மாநிலம் ஆகியிருக்கும். லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட்டிருக்கும். அன்று பாமகவின் பேச்சைக் கேட்காத கலைஞர் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

2008 ஆம் ஆண்டில் பாமக முன்வைத்த படிப்படியாகவும் விரைவாகவும் மதுவில்லாத தமிழ்நாட்டை படைப்பதற்காக கொள்கை அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில், மதுவின் பாதிப்புகள் பன்மடங்கு அதிகரித்துவிட்டதால், இப்போது – பூரண மதுவிலக்கு எனும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு தமிழ்நாடு சென்றுவிட்டது.

படிப்படியான கொள்கையை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்தது. இனி பூரண மதுவிலக்கை செயலாக்கும் வழிமுறைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கும். இதுவரை திமுக – அதிமுகவிடம் கோரிய பாமக, இனி தானே பூரண மதுவிலக்கை நிறைவேற்றும்.

தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை 2008

https://pmkpolicy.files.wordpress.com/2015/08/pmk-alcohol-policy-2008-e28093-full-report.pdf


சாதிவாரிக் கணக்கெடுப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பின் நகல்

November 12, 2014

சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு உச்சநீதி மன்றம் தடைவிதித்தது போன்ற ஒரு செய்தி உருவாக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கவில்லை.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றே தீர்ப்பில் கூறப்பட்டது. எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது. தீர்ப்பின் நகலை இணைப்பில் காண்க: Caste-Based-Census-SC-judgment

சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் உடனடியாக நடத்தி, 69% இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு காப்பாற்ற வேண்டும். இதற்கான போராட்டங்களை பா,ம.க முன்னெடுக்கும்.


பாட்டாளி மக்கள் கட்சியின் 2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை.

November 4, 2014

கீழே உள்ள இணைப்பின் மீது சொடுக்கவும்:

பாட்டாளி மக்கள் கட்சியின் 2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை.