இன்று புதிதாக சிலர் எழுப்பும் மது ஒழிப்பு கோரிக்கை – ஏழு ஆண்டுகளுக்கு முன்பே பாமக் முன்வைத்ததுதான்: தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை 2008

August 3, 2015

PMK Alcohol Policy 2008 – Full Report

“பூரண மதுவிலக்குதான் முதல் கையெழுத்து” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்தார். அன்று தொடங்கிய “பூரண மதுவிலக்கு” விவாதம் இப்போது ஒரு முதன்மை கோரிக்கையாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை (தமிழருவி மணியன்) என்று சிலரும், மதுவிலக்கே சாத்தியமில்லை (அ. மார்க்ஸ், மனுஷ்யபுத்திரன்) என்று வேறு சிலரும் கூறிவருகின்றனர்.

இதனிடையே, ‘படிப்படியான மதுவிலக்கு வேண்டாம்’ என்று பாமக சொல்வது போலவும், ‘சாத்தியமில்லாத ஒன்றை மருத்துவர் அன்புமணி இராமதாஸ்’ அவர்கள் பேசுவது போலவும் சிலர் பேசத்தொடங்கியுள்ளனர்.

கூடவே, பாமகவுக்கு மதுவிலக்கு குறித்து பாடம் எடுக்கவும் இவர்கள் முயல்கின்றனர். ஆனால், படிப்படியான மது ஒழிப்பு எவ்வாறு சாத்தியம் என்பதற்கான அறிவியல்பூர்வமான வழிகளை 2008 ஆம் ஆண்டிலேயே பாமக முன்வைத்தது என்பதை இவர்களுக்கு நாம் இப்போது நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

பாமகவின் கோரிக்கையை அப்போதே செயல்படுத்த கலைஞர் கருணாநிதி முன்வந்திருந்தால் இப்போது தமிழ்நாடு மது இல்லாத மாநிலம் ஆகியிருக்கும். லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட்டிருக்கும். அன்று பாமகவின் பேச்சைக் கேட்காத கலைஞர் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

2008 ஆம் ஆண்டில் பாமக முன்வைத்த படிப்படியாகவும் விரைவாகவும் மதுவில்லாத தமிழ்நாட்டை படைப்பதற்காக கொள்கை அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில், மதுவின் பாதிப்புகள் பன்மடங்கு அதிகரித்துவிட்டதால், இப்போது – பூரண மதுவிலக்கு எனும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு தமிழ்நாடு சென்றுவிட்டது.

படிப்படியான கொள்கையை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்தது. இனி பூரண மதுவிலக்கை செயலாக்கும் வழிமுறைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கும். இதுவரை திமுக – அதிமுகவிடம் கோரிய பாமக, இனி தானே பூரண மதுவிலக்கை நிறைவேற்றும்.

தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை 2008

https://pmkpolicy.files.wordpress.com/2015/08/pmk-alcohol-policy-2008-e28093-full-report.pdf

Advertisements